நேற்றிரவு சரவாக்கில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நெருங்கிச் சென்ற ஆஸ்திரேலிய ஒலி/ஒளிபரப்புக் கழகத்தின் (ஏபிசி) செய்தியாளர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
செய்தி நிருபர் லிண்டன் பெஸ்ஸரும் ஒளிப்பதிவாளர் லூயிஸ் எரோக்லுவும் நஜிப்பை அணுகிச் சென்றபோது கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதாக ஏபிசி இன்று காலை அறிவித்தது. ஆனால், அவர்களின் கடப்பிதழ்கள் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்விருவர்மீதும் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் புகார் பதிவு செய்திருக்கிறார் என சரவாக் சிஐடி தலைவர் தேவ் குமார் கூறினார்.
“அவர்கள் மார்ச் 5-இல் கேஎல்ஐஏ வந்து அங்கிருந்து மார்ச் 12-இல் கூச்சிங் வந்தார்கள். பிரதமரின் சரவாக் வருகை பற்றிச் செய்தி சேகரிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறிக்கொண்டார்கள்”, என தேவ் தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் இருவரும் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அது சரி ,இந்நாட்டு நிருபர்களா நன்கொடைக்கு எழுத, வெளிநாட்டு நிருபர்கள் ஆச்சே, அவர்கள் கொஞ்சம் நோண்டத்தான் செய்வார்கள். ஆண, கேஸ் நஜிப்பை நெருங்கனதா இல்ல அவர் அந்தரங்கத்தையே தொட்டுவிட்டாங்களோ!