பெர்னாமா செய்தியாளராக இந்தியாவில் பணியாற்றி வந்த மு.சந்திரன் (48) இன்று காலை 2.10 மணியளவில் ( மலேசிய நேரம்) டில்லியில் உள்ள சாணாக்கியாபுரி மருத்துவ மனையில் காலமானார்.
வயிற்றுபோக்குக்காக மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நிலையில் ஏற்பட்ட சிக்கல்களால் காலமானதாக அறியப்படுகிறது. அவரது நல்லுடல் நாளைக் காலை (15/3/2016) 7.00 மணியளவில் மாஸ் விமானம் (MH191 ) வழியாக மலேசியா வந்தடையும் என பெர்னாமா அறிக்கை கூறுகிறது.
பினாங்கு அறிவியல் பல்கலைகழகத்தில் பத்திரிக்கை தொடர்புத்துறையில் பட்டம் பெற்ற சந்திரன் 2002 முதல் பெர்னாமாவில் பணியாற்றி வந்தார். கடந்த வருடம் தொடக்கம் முதல் அவர் பதவி உயர்வு பெற்று டில்லிக்கான பெர்னாமா நிருபரானார்.
அவரது பிரிவு பத்திரிக்கைத் துறைக்கு ஒரு இழப்பாகும் என்கிறார் அவருடைய நண்பர், வழக்கறிஞர் கா. ஆறுமுகம். பெரும்பாலும் நீதிமன்ற வழக்குகள் சார்புடையச் செய்திகளை பெர்னாவிற்காக சேகரித்த சந்திரன் ஆழமும் அகலமும் கொண்ட வகையில் எழுதக்கூடியவர். “மிகவும் சுலபமாக பழகக்கூடிய அவர் மென்மையான குணமும் கூரிய சிந்தனையயும் கொண்டவர். அவரது செய்திகளில் ஒருதலைபட்ச மற்ற அரசியல் கருத்துக்கள் இருபதைக்கண்டு அவரை பலமுறை பராட்டியுள்ளேன்”, என்கிறார் ஆறுமுகம்.
அவரது பிரிவால் துயருறும் அவரது மனைவி மலர்விழி துரைசாமி (47), மகன்கள் ருத்திரன் (18), நவின் (16) மற்றும் அவரது குடும்பதினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை செம்பருத்தி.காம் குடும்பத்தினர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்