தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை அவரது தவணைக்காலம் முடிவதற்கு முன்பே பதவியிலிருந்து அகற்ற முடியும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக நிலவும் சர்ச்சை குறித்துக் கருத்துரைத்தபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
ஒரு பிரதமரையும் அவரின் கொள்கைகளையும் மதிப்பிடவும் நிராகரிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்றாரவர்.
“ஒரு பிரதமரை அமைதியான, சட்டப்பூர்வமான வழிகளில் அகற்றும் உரிமை மக்களுக்கு உண்டு.
“பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக அவரை அவரின் தவணைக் காலம் முடிவதற்குமுன் அகற்ற முடியாது என்பது பொருளல்ல”, என மகாதிர் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டார்.
உலக முழுவதும் பல பிரதமர்கள் இப்படிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய மகாதிர், அதற்கு அப்துல்லா அஹ்மட் படாவி நல்ல எடுத்துக்காட்டு என்றார்.