ஐந்தாண்டுகளில் அரசாங்க இரகசியங்கள் கசிய விடப்பட்ட 31 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன

az2010க்கும்  2015க்குமிடையே  அரசாங்க  இரகசியங்கள்   கசிந்த  31  சம்பவங்கள்  நடந்திருப்பதாக  பிரதமர்துறை  அமைச்சர்   அஸலினா  ஒத்மான்  சைட்  கூறினார்.

அந்த  ஐந்தாண்டுக்  காலத்தில்  அரசாங்க  இரகசிய  காப்புச்  சட்டத்தின்(ஓஎஸ்ஏ)கீழ்  விசாரிக்கப்பட்ட  15 பேரில்  நால்வர்  மட்டுமே  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர்.

நால்வர்மீதும்  ஓராண்டிலிருந்து  ஏழாண்டுவரை  சிறைத்தண்டனை  விதிக்க  வலை  செய்யும்   ஓஎஸ்ஏ பிரிவு  8-இன்கீழ்  குற்றஞ்சாட்டப்பட்டது.

நாடாளுமன்றத்தில்   கேள்விகளுக்கு  எழுத்துப்பூர்வமாக  வழங்கிய  பதிலில்  அஸலினா  இதைத்  தெரிவித்தார்.