தாய்லாந்தில் தீவிரவாதிகள் இராணுவ முகாம்மீது தாக்குதல்

attதாய்லாந்தின்  நராதிவாத்தில்,  தீவிரவாதிகள்  ஜோக்  இரோங்  மருத்துவ  மனையிலிருந்து  அருகில்  உள்ள  இராணுவ  முகாம்மீது  தாக்குதல்  நடத்தியதில்   தாய்லாந்து  பாதுகாப்புப்  படையினர்  எழுவர்  காயமடைந்தனர்.

முன்னதாக,  தீவிரவாதிகள்   அவ்வட்டார  இரயில்வே  நிலையத்தைத்  தாக்கியதாக  ஜோக்  இரோங்  போலீஸ்  தலைவர்  கர்னல்  பிரவிட்  சோசெங்  தெரிவித்தார்.  அதன் பின்னர்  இராணுவ  முகாம்மீது  துப்பாக்கியால்   சுட்டிருக்கிறார்கள்.

“பிற்பகல்  3.55க்கு  இரயில்வே   நிலையத்  தாக்குதலுக்குப்  பின்னர்  பொதுமக்கள்போல்   வேடமிட்ட  10 தீவிரவாதிகள் மாவட்ட  மருத்துவ  மனைக்குள்  நுழைந்து  அங்கிருந்து  மருத்துவ  மனைக்குப்  பின்புறத்தில்  உள்ள  இராணுவ  முகாமைத்  தாக்கத்  தொடங்கினார்கள்”, என  பிரவிட்  ஊடகங்களிடம்  தெரிவித்தார்.

தீவிரவாதிகளும்  பாதுகாப்புப்  படைகளும்  ஒரு  மணி  நேரத்துக்குமேல்  துப்பாக்கியால்  சுட்டுக்  கொண்டார்கள்.  அதில்  பாதுகாப்புப்  படையினரில்  எழுவர்  காயமடைந்தனர்.  மூவர்  கவலைக்கிடமான  நிலையில்  உள்ளனர்.