எஸ்டி: ஆவாங் அடேக் பேங்க் நெகாராவின் அடுத்த கவர்னர் ஆகலாம்

awngஸெட்டி அக்தார்  அசீசுக்குப்  பின்னர்  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஆகும்  வாய்ப்பு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அணுக்கமான  இருவருக்கு  உள்ளதாக  சிங்கப்பூரின்  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  தெரிவித்துள்ளது.

ஒருவர்  அமெரிக்காவுக்கான  மலேசியத்  தூதர்  ஆவாங்  அடேக்  ஹுசேன்,  மற்றவர்  பிரதமர்துறை  அமைச்சர்  அப்துல்  வாஹிட்  ஒமார். பிரதமருக்கு  நெருக்கமான  வட்டாரங்களிலிருந்து  கிடைத்த  தகவல்  என்று  அந்த  ஆங்கில  நாளேடு  கூறியது.

பேங்க்  நெகாராவைப் பொறுத்தவரை  அது,  பேங்க்  நெகாராவின்  துணை  கவர்னர்  முகம்மட்  இப்ராகிம்  அந்த  வங்கியின்  கவர்னர் ஆவதையே  விரும்பதாகவும்  அச்செய்தித்தாள்  கூறிற்று.