‘நஜிப்பா மகாதிரா? கருத்துக்கணிப்பு வைத்து தீர்மானிக்கலாமே’

pllதமக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கிடையில்  யாருக்கு  மக்கள்  ஆதரவு  என்பதைக்  காண்பிக்க  தேசிய  அளவில்  கருத்துக்கணிப்பு  ஒன்றை  நடத்தலாம்  என்று முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறுகிறார்.

பல்வேறு  தரப்பினர்  நஜிப்புக்கு  ஆதரவு  தெரிவித்தாலும்  சிலருக்கு  இன்னும்  நம்பிக்கை  வரவில்லை.  எனவே,  இதற்கு  முடிவுகட்ட   கருத்துக்கணிப்பு  உதவும்  என்று  மகாதிர்  கூறினார்.

தேசிய கருத்துக்கணிப்பில்  நாட்டில்  உள்ள  வாக்காளர்கள்  நஜிப்புக்குத்  தங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொள்ளலாம்.

அதில்  நஜிப்  வென்றால்  அவர்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கையைக்  கைவிடுவதாக  மகாதிர்  உறுதி  கூறினார்.

“அவரைப் பதவி  விலகுமாறு  கேட்டுக்கொள்வதை  நிறுத்திக்  கொள்வேன். 1எம்டிபி,  ரிம2.6 பில்லியன்,  யுகே-இல்  அமெரிக்காவில்  உள்ள  மாளிகைகள்  பற்றி   ‘Wolf of Wall Street’ ஆபாசப்  படம்  பற்றியெல்லாம்  வாய்  திறக்க  மாட்டேன். நஜிப்   வாழ்நாள்  முழுவதும்  பிரதமராக  இருக்கலாம்,

“ஆனால், எனக்குக்  கூடுதல்  வாக்குகள்  கிடைத்தால்,   நான்  கவனப்படுத்திய   நஜிப்பின்  நிதி  முறைகேடுகள்  யாவும்  உண்மையே  என்பதை  மக்கள்  ஏற்றுக்கொள்கிறார்கள்  என்று  பொருள்படும். அதன்  பிறகு  அவர்  பதவி  விலக  வேண்டும்”,  என்றாரவர்.