மார்ச் 27-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நடைபெறவுள்ள கூட்டத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
இதற்குமுன் எத்தனையோ பேரணிகளும் இயக்கங்களும் இப்படித்தான் நடந்து முடிந்துள்ளன என்றாரவர்.
“எத்தனை பேரணிகள், ஆருடங்கள், கடந்த ஆண்டில் மட்டும்.
“நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிக் கூறினார்கள், 2016 பட்ஜெட் அங்கீகரிக்கப்படாது, அம்னோ பேரவை அமளியில் முடியும் என்றார்கள்…. எதுவும் நடக்கவில்லை”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஹிஷாமுடின் கூறினார்.
மார்ச் 27 கூட்டத்தை, மலேசியாவைப் பாதுகாக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் ஏற்பாடு செய்திருக்கிறார். அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உள்பட நஜிப்பின் எதிரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
“எருமாட்டுத்தலையை வெட்டி எடுத்து வந்து, சிலாங்கூர் அரச கட்டிடத்திற்கு முன் வீசி எறிந்தவர்களுக்கு நான் விருந்து கொடுத்தேன். அப்போதும் ஏதும் நடந்துவிடவில்லை”. என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே!
வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தாலும் வாய் ஜாலம் செய்வதில் வல்லவர் தே.மு. மந்திரிகள்.
அண்ணன் எப்ப தொலைவான் திண்ணை எப்போ காலியாகும் என்று அமைதிகாக்கும் ஹிசாமுடின் என்ற கோன வாயான் , நீங்க எப்போது மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தீர் ?