என்எஸ்சி சட்டம் தேர்தலைத் தடுக்காது- ஷகிடான் காசிம்

nscதேர்தல்களை   இரத்துச்  செய்யும்  அதிகாரம்  தேசிய  பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி) சட்டமுன்வரைவுக்குக்  கிடையாது  என   பிரதமர்துறை  அமைச்சர்  ஷகிடான்  காசிம்  கூறினார்.

“(பாதுகாப்பு  மண்டல)  பிரகடனம்  குறிப்பிட்ட  பகுதியில்  தேர்தலைக்  கட்டுப்படுத்தாது.

“அது  அப்பகுதியில்  அரசியல்  கட்சிகள்  தேர்தல்  பரப்புரைகளில்  ஈடுபடுவதையும்  தடுக்காது”.

பாதுகாப்பு  மண்டலம்  என்று  அறிவிக்கப்பட்ட  பகுதிகளில்  தேர்தல்  நடைபெறுமா  என்ற  கேள்விக்கு  எழுத்துவழி  வழங்கிய  பதிலில்  ஷகிடான்  காசிம்  இவ்வாறு  தெரிவித்தார்.

பாதுகாப்பு  மண்டலப்  பிரகடனம்  அவசரகாலப்  பிரகடனம்  போன்றல்ல  என்று  விளக்கிய  ஷகிடான்,   அது  பாதுகாப்பு  மருட்டல்களுக்கு  எதிராக   பாதுகாப்புப்  படைகள்  நடவடிக்கையில்  ஈடுபட  மட்டுமே    உதவுகிறது  என்றார்.

அதனால்  பாதுகாப்பு  மண்டங்களில்  அன்றாட  நடவடிக்கைகள்  எவ்வகையிலும்  பாதிக்கப்படாது.