‘கட்சிகள் பில்லியன் கணக்கில் செலவிட்டாலும் அதை விசாரிக்கும் அதிகாரம் இசி-க்கு இல்லை’

hashimஅரசியல்  கட்சிகள்  எவ்வளவு  செலவிட்டாலும்  அதை  விசாரிக்கும்  அதிகாரம்  தனக்கில்லை  என்பதைத்  தேர்தல்  ஆணையம்(இசி)  மீண்டும்  வலியுறுத்தியுள்ளது.

கடந்த  பொதுத்  தேர்தலில்  பிஎன்  ரிம1.5 பில்லியன்  செலவிட்டதை  ஒப்புக்கொண்டிருப்பதற்கு  எதிராக  தஞ்சோங்  எம்பி  இங்  வை  ஏய்க்கும்  ராசா  எம்பி  தியோ  கொக்  சியோங்கும்  முறையிட்டிருப்பது  குறித்து  கருத்துரைத்த  இசி  தலைவர்  முகம்மட்  ஹாஷிம்  அப்துல்லா  இவ்வாறு  கூறினார்.

“அரசியல்  கட்சிகள்மீது  விசாரணை  நடத்தும்  அதிகாரம்  இசி-க்கு  இல்லை.

“தேர்தல்  வேட்பாளர்களை மட்டுமே  விசாரிக்கலாம்  அதுவும்  தேர்தல்   காலத்தின்போது  மட்டும்தான்”, என்று  அவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அவர்கள்  வேட்பாளர்கள்  பற்றி  அல்லாமல்  ஒரு  அரசியல்  கட்சி  செலவு  செய்திருக்கும்  விவகாரம்  பற்றிப்  பேசுகிறார்கள்,  அது  1966 சங்கச் சட்டத்தின்கீழ்  வருகிறது  என்று  முகம்மட்  ஹாஷிம்  குறிப்பிட்டார்.

இசி  மற்ற  அமைப்புகளின்  அதிகாரத்தில்  தலையிட விரும்பவில்லை  என்றாரவர்.