ரிம2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பத் தடை விதிக்கும் முடிவை கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் சாடினார். அது பற்றி விவாதிப்பது நீதிமன்ற வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என்பதால் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
“சட்டத்துறைத் தலைவரின் முடிவின்மீது வழக்குரைஞர் மன்றம் வழக்கு தொடுத்திருப்பதால், அது(நன்கொடை) பற்றி யாரும் பேசக்கூடாது என்றும் அப்படி விவாதிப்பது நீதிமன்ற விசாரணையைப் பாதிக்கும், நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையும் என்றெல்லாம் அமைச்சர்கள் எச்சரிக்கிறார்கள்.
“அதிகாரிகள் தடை உத்தரவு போடும்போது நீதிமன்ற விசாரணையைக் காரணம்கூறுவதே வழக்கமாகி விட்டது”, என்று யோங் கூறினார்.
நாடாளுமன்றத்திலும் பொதுவிலும் பேச்சுச் சுதந்திரத்துக்கு இவ்வாறு தடைவிதிப்பது தவறு என்றாரவர்.