ஏஜிக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம்: எதிரணி மேல்முறையீடு செய்யும்

oppசட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலிமீது  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானத்துக்கு  மக்களவைத்  தலைவர்  அனுமதி  மறுத்திருப்பதற்கு  எதிராக  எதிரணி  மேல்முறையீடு  செய்யும்.

எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்   மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அலியிடம்  மேல்முறையீட்டைத்  தாக்கல் செய்வார்.

“விரைவில்  அவருக்குக்   கடிதம்  அனுப்புவேன். மக்களின்  நலனை  முன்வைக்க  வேண்டும்  என  வலியுறுத்துவேன்”,  என்று  செய்தியாளர்களிடம்  வான்  அசிசா  கூறினார்,