கடந்த 5 ஆண்டுகளில் 2015-இல் அதிகமானோர் ஆள்குறைப்பு செய்யப்பட்டனர்

richardகடந்த  ஐந்தாண்டுகளில்  2015-இல்தான்  மிக  அதிகமான  தொழிலாளர்கள்  ஆள்குறைப்பு  செய்யப்பட்டார்கள்  என  மனிதவள  அமைச்சர்  ரிச்சர்ட்  ரியோட்  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

“கடந்த  ஐந்தாண்டுகளை  எடுத்துக்  கொண்டால்  2015-இல்தான்  ஆள்குறைப்பு  அதிகம்  நடந்துள்ளது. ஆனாலும் 2007, 2008,  2009  ஆகிய  ஆண்டுகளுடன்  ஒப்பிட்டால்  எண்ணிக்கை  குறைவுதான்”, என  எழுத்துவழி  அளித்த  பதிலில்  அமைச்சர்  கூறினார்.

2015-இல்  நிதி, காப்புறுதி,  தகாபுல் துறைகளில்தான்  அதிகமானோர்  வேலைகளை  இழந்துள்ளனர்  என்றாரவர்.