ரிம2.6பில்லியன் குறித்து கேள்வி கேட்பதற்குத் தடையா? பண்டிகார் தெரியாது என்கிறார்

pandரிம2.6 பில்லியன்  நன்கொடை  தொடர்பான  கேள்விகள்  கேட்பதற்கு  மக்களவை  நிலை  ஆணைகளின்படி  தடை விதிக்கப்பட்டிருப்பது  பற்றி  மக்களவைத்  தலைவர்   பண்டிகார்  அமின்  மூலியா  அறிந்திருக்கவில்லை.

“எப்போது  அப்படிக்  கூறப்பட்டது?”, என  கூ  ஹிசியாவ் லியங்கிடம்  பண்டிகார்  வினவினார்.  கூ (பிகேஆர்-  அலோர்  ஸ்டார்),  அரசாங்கம்  சிம்  ட்ஸே  ட்ஸின்னுக்கு  வழங்கிய  எழுத்து வடிவ  பதில்  குறித்து  மக்களவைத்  தலைவரிடம்  விளக்கம்  கேட்டபோது  அவர்  இவ்வாறு  வினவினார்.

அந்தப்  பதிலைத்  தாம்  பார்க்க  விரும்புவதாகவும்  பண்டிகார்  சொன்னார்.

சிம்  கேட்டிருந்த  கேள்விக்கு  எழுத்துவழி  பதில்  வழங்கிய  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒஸ்மான்  சைட்,  ரிம2.6 பில்லியன்  விவகாரம்  நீதிமன்ற  விசாரணையில்  இருப்பதால் நிலை  ஆணை 23(1)(ஜி)-இன்படி  அக்  கேள்விக்குப்  பதிலளிக்க  இயலாது  என்று  குறிப்பிட்டிருந்தார்.

அஸலினா  ரிம2.6 பில்லியன்  பற்றிய  கேள்விகளுக்குத்  தடை  விதித்திருப்பது  தமக்குத்  தெரியாது  என்று  பண்டிகார்  தெரிவித்தார்.

மேலும், நிலை  ஆணைகள்  குறித்து  அவைத்  தலைவரோ  துணைத்  தலைவரோதான்  தீர்மானிக்க  முடியும்  என்றார்.

“அது  நீதிமன்ற  விசாரணையைப்  பாதிக்குமா,  அது  இரகசியமா  என்பதை அவைத்  தலைவராக  இருப்பவர்கள் –  நான்  அல்லது  என்  உதவியாளர்கள்தான் முடிவு  செய்ய  வேண்டும்”, என  பண்டிகார்  கூறினார்.