அமெரிக்க ஆய்வு நிலையம்: பிப்ரவரிதான் வெப்பம் மிகுந்த மாதம்

noaaஅமெரிக்காவின்  தேசிய  கடல், வான்மண்டல வாரிய(என்ஓஏஏ)த்தின்  கணக்கின்படி  பிப்ரவரிதான்  வெப்பம்  மிகுந்த  மாதமாகும். 1880ஆம்  ஆண்டு  தொடங்கி  வெப்பநிலையைப்  பதிவுசெய்து  வரும்  அமைப்பு  அது.

20ஆம்  நூற்றாண்டில்  இருந்ததைவிட  நிலத்திலும்  கடலிலும்  வெப்பநிலை  1.21 பாகை  கூடியிருப்பதாக  அது  தெரிவித்தது.

பிப்ரவரியில்  தென் அமெரிக்கா,  ஆப்ரிக்கா,  தெற்கு மற்றும்  கிழக்கு  ஐரோப்பா,  தெற்கு  ஆசியா  ஆகியவற்றில்  பல  பகுதிகளில்  வெப்பம்  மிகுந்திருதிருந்தது. அதேவேளை  ஆசியாவின்  சில  பகுதிகளில்  குளிரும  மிகுந்திருந்தது.

ஆண்டுக்கணக்கில்  பார்த்தால்  2015ஆம்  வரலாற்றிலேயே  வெப்பமிக்க ஆண்டாகும்  என்று  என்ஓஏஏ  கூறியது.

– dpa