கெஜாரா புள்ளிக்குறைப்பு முறை மே மாதம் செயல்படத் தொடங்கும்

kejதானியங்கு  அமலாக்க  முறை (ஏஇஎஸ்)யும்  கெஜாரா  புள்ளிக்குறைப்பு  முறையும்  ஒன்றிணைந்த  தானியங்கு  விழிப்புணர்வு பாதுகாப்பு  முறை (ஆவாஸ்) மே  மாதம்  அமலுக்கு வருகிறது.

அதன்  பொருட்டு  சாலைப்  போக்குவரத்துத்  துறை  சட்டம்  திருந்தப்படும்  என  போக்குவரத்து  துணை  அமைச்சர்  அப்  அசீஸ்  கப்ராவி  கூறினார்.

“ஏப்ரலில்  நாடாளுமன்றத்தில்  (சட்டத்  திருத்தத்தைக்)  கொண்டுவர  எண்ணியுள்ளோம். மே  மாதத்தில்  ஆவாஸை  அமல்படுத்த  முடியும்  என  நம்புகிறோம்”, என்றாரவர்.

இதன்  தொடர்பில்  நெடுஞ்சாலைகளிலும்,  கூட்டரசு  சாலைகளிலும்  போக்குவரத்து  சந்திப்புகளிலும் கூடுதல்  ஏஇஎஸ் கேமராக்கள்  பொருத்தப்படும்.

கெஜாரா  முறையின்கீழ்  வாகன  ஓட்டுனர்கள்  தவறு  செய்யும்போது  மதிப்புக்குறைப்புப் புள்ளிகள்  கொடுக்கப்படும். 60  புள்ளிகள்  சேர்ந்து விட்டால்  ஓட்டுனர்  வாகனம்  ஓட்டும்  உரிமத்தை  இழப்பார்  என  அப்  அசீஸ்  கூறினார்.