பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முகைதின் யாசின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக சதி செய்தார் என்று கூறியது பெரும் பாவமாகும்.
பிரதமருக்கு எதிரான சதித் திட்டத்தை மறுத்த முகைதின்தான் இவ்வாறு கூறினார்.
அதேவேளை நாட்டு நிலவரம் பற்றியும் 1எம்டிபி பற்றியும் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் உள்பட அரசாங்க உயர் தலைவர்களிடமிருந்து தமக்குக் தகவல் கிடைத்தது உண்மைதான் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“நான் அப்போது கட்சிலும் அரசாங்கத்திலும் இரண்டாம் நிலையில் இருந்தேன். தகவல் அறியும் அதிகாரம் எனக்குண்டு. தகவல் அறிதல் என்பது சூழ்ச்சி செய்வதாகாது. மேலும், நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் எனக்கில்லை.
“சட்டத்துறைத் தலைவருக்கும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கும்தான் அந்த அதிகாரம் உண்டு. அவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் எனக்கில்லை,. உத்தரவிட்டிருந்தாலும் பின்பற்றி இருக்க மாட்டார்கள். பிரதமரின் உத்தரவை மட்டுமே பின்பற்றுவார்கள்.
“எனவே, அஸலினா என்னைப் பாதிக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் பாவமாகும்”, என்று முகைதின் குறிப்பிட்டார். மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் முகைதின் இவ்வாறு கூறினார்.