அம்னோவுக்கும் சிலாங்கூர் என்ஜிஓ-கள் கூட்டமைப்பின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் “அன்வாரை விடுதலை செய்” விளம்பரப் பலகையை எரிக்க விரும்புவதற்கும் தொடர்பில்லை என்கிறார் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா.
ஜமால் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர்தான் என்றாலும் இந்த விவகாரத்தில் கட்சிப் பிரதிநிதியாக அவர் செயல்படவில்லை என்று கூறிய அனுவார் இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்றார்.
“நம் நாட்டில் சட்டங்கள் உண்டு. அவர் சட்டத்தை மீறினால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவர் சட்டத்தை மீறினாரா என்பது எனக்குத் தெரியாது.
“ஆனால், அவரின் செயல்களுக்கும் அம்னோவுக்கும் சம்பந்தமில்லை”, என்றார்.
புதன்கிழமை ஜமாலும் அவரின் ஆதரவாளர்களும் அம்பாங்கில் “அன்வாரை விடுதலை செய்” விளம்பரப் பலகை ஒன்றை எரிக்க முயன்றது பற்றிச் செய்தியாளர்கள் வினவியதற்கு அனுவார் மூசா இவ்வாறு பதிலளித்தார்.
ஜமால் dan UMNO pu…………