‘சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு’ வீடு வாங்கிய சிஎம் லிம்மீது போலீசில் புகார்

houseபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  தாம்  முன்பு  வாடகைக்குக்  குடியிருந்த  வீட்டை  மிகக்  குறைந்த  விலைக்கு  வாங்கியதாகக் கூறப்படுவது  தொடர்பில்  போலீசில்  புகார்  செய்யப்பட்டுள்ளது.

மலேசிய  சமூக  ஊடகங்களைக்  கண்காணிக்கும்  எறும்புக்குழுவின்  தலைவர்  ஸபாருடின்  அப்துல்  ரகிம்  டாங்  வாங்கி  போலீஸ்  தலைமையகத்தில்  இன்று  புகாரைச்  செய்தார்.

“இப்போதுதான்  போலீசில்  புகார்  செய்தேன்.  லிம்  குவான்  எங்  ஊழல்  புரிந்திருக்கிறார்  என்று (தாசெக் குளுகோர்  எம்பி) ஷாபிடின்  யஹ்யா  தெரிவித்திருப்பது  பற்றி  விசாரிக்க  வேண்டுமாய்க்  கேட்டுக்  கொண்டிருக்கிறேன்.

“ஜார்ஜ்டவுனில்  உள்ள  அந்த  பங்களாவின்  விலை  2008-இல்  ரிம2.5 மில்லியன்  என்று  சொல்லப்படுகிறது. இப்போது பெரிய  அளவில்  புதுப்பிக்கப்பட்டுள்ளது.

“அதன்  இன்றைய  மதிப்பு  ஏறத்தாழ  ரிம6.5 மில்லியன். ஆனால்,  லிம்  ரிம2.8 மில்லியனுக்குத்தான்  வாங்கியுள்ளார்”, என்றாரவர்.