சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபேக்கோ பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடவுள்ளது.
அதன் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2017 இரண்டாம் பாதி ஆண்டில் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என அந்நிறுவனம் புர்சா மலேசியாவுக்கு நேற்று தெரியப்படுத்தியது.
கள்ள சிகரெட்டுகளின் வரத்து பெருகி இருப்பது இம்முடிவுக்கு ஒரு காரணம் என்று அது கூறியது.
“உயர்ந்த சுங்க வரிச் சூழலால் கள்ள சிகெரெட் வரத்து அதிகரித்துள்ளது. சட்டப்பூர்வ சிகரெட்டுகளின் விற்பனை குறைந்து உற்பத்திச் செலவு கூடியுள்ளது”.