அம்னோ உறுப்பினர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்ற தமக்கு உதவ வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு எழுதிய திறந்த மடல் ஒன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
“கட்சியையும் நாட்டையும் பாதுகாக்க எனக்கு உதவ வேண்டும் என்று கட்சியின் உண்மையான போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அம்னோ உறுப்பினர்களை அழைக்கிறேன். எல்லா கிளைக் கூட்டங்களிலும் கட்சித் தலைவரும் பிரதமருமான நஜிப்புக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் கொண்டு வாருங்கள். கட்சித் தேர்தலைத் தள்ளிப்போடக் கூடாது இவ்வாண்டிலேயே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துங்கள்”, என மகாதிர் திறந்த மடலில் கேட்டுக்கொண்டார்.
14வது பொதுத் தேர்தல்வரை காத்திருக்கக் கூடாது. காத்திருந்தால் நஜிப்பின் தலைமையில் செயல்படும் அம்னோ தோற்றுப்போகும். தோற்றுப்போனால் அதை மீண்டும் உருவாக்க முடியாது என்றார்.
நீ எதை கொண்டு வந்தாலும் ஒன்றம் நடக்காது. அவனின்2.6 பில்லியனும் இன்னும் எவ்வளவோ கையூட்டு– நீர் மூழ்கி கப்பலுக்கும் ,. விமானங்கள் வாங்கியதற்கும் தற்காப்பு தளவாடங்களுக்கும் எவ்வளவோ? லீ குவான் இயு சிங்கப்பூரில் ஊழல் இல்லாத ஆட்சிக்கு அடிவகுத்தது மிகவும் போற்ற கூடியது. லீ குவானை மலேசியாவில் இருந்து தூக்கி எறிந்ததும் இந்த மலேசிய ஊழல்வாதிகள் தான். லீ குவான் இயு ஜெயரத்தினம் இன்னும் சில அரசியல் வாதிகளை பழி வாங்கினாலும் ஒன்றும் இல்லா சிங்கபூரை முதலாம் உலகத்திற்கு இட்டு சென்றது பாராட்ட கூடியது. இன்று மலேசியாவை யார் நாறடித்தது? கெடுவான் கேடு நினைப்பான்.
விதைத்தவன் அறுவடை செய்கிறான் ….!
இதெல்லாம் எடுபடாது, தலைவா! பதவியில் இருப்பவனுக்குத்தான் எல்லாரும் பல்லைக் காட்டுவார்கள்!