சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள், சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜ்மால் முகம்மட் யூனுஸ் தலைமையில் கொளுத்தும் வெய்யிலையையும் பொருட்படுத்தாமல் புத்ரா ஜெயாவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர் சிவப்புச் சட்டை அணிந்து கைகளில் மகாதிரைக் குறைகூறும் பதாதைகள் ஏந்தியிருந்தனர்.
பதாதைகளில் ஒன்று மகாதிரை டிஏபி-இன் கருவி எனக் குற்றஞ்சாட்டியது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மகாதிரின் அலுவலகம் அமைந்துள்ள பெர்டானா தலைமைத்துவ அறநிறுவனக் கட்டிடத்துக்கு வெளியில் கூடினர். அவர்கள் உள்ளே நுழைந்து விடாமல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன.
அருகில் கலகத் தடுப்புப் போலீஸ் அணி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எல்லாமே திசை திருப்பும் தில்லு முள்ளுகள். இதில் ஆச்சரியப்படுவத்ர்க்கு ஒன்றும் இல்லை. இதெல்லாம் இவனுக்கு தெரியாத ஒன்றும் இல்லை.
கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தினால் பதவி கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்! ஜமால் முகமதுக்கு அடுத்து ஏதாவது பெரிய பதவி கிடைக்காமலா போய்விடும்! ஆனால் ஒரு வருத்தம். அலுவலகத்திற்கு முன்னாள் சாத்தே ஏதேனும் விற்கவில்லையா? அட, குறைந்தபட்சம் வாலைக்கூட ஆட்டவில்லையா!
பிட்டத்தை ஆட்டனுமே, அவர் வீட்டுக்கு எப்போ போறீங்க? அதுக்கு இன்னும் நன்கொடை வந்து சேரலையா?
நாட்டில் பல்வேறு பொருளாதார சுமையில் மக்கள் இருக்கும் பொழுது இந்த ஆர்பாட்டம் தேவைதான அம்னோவே? உண்மை நிலைமை திசை திருப்பாமல் நாட்டின் நிலைமை சீர் செய்ய வழியை பாருங்கள் அம்னோ.