தெற்கு ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 55 பயணிகளும் ஆறு பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
டுபாயிலிருந்து வந்த அவ்விமானம் ரோஸ்டோவ் விமான நிலையத்தில் தரை இறங்க முயன்று முதல் முயற்சியில் தோல்வி கண்ட பின்னர் மறுபடியும் முயன்றபோது தரையில் மோதியது என ரஷ்ய அவசரகால அமைச்சரவை கூறியது.
தொடக்கநிலை ஆய்வில் அவ்விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக விசாரணைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.