அனல் காற்றுக்கு போலீஸ் பயிற்சியாளர் ஒருவர் பலியானதை அடுத்து மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
இம்மாதத் தொடக்கத்திலிருந்து தகிக்கும் வெய்யிலால் நான்கு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒருவர் உயிர் இழந்தார் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
புதன்கிழமை, ஜோகூரில் போலீஸ் பயிற்சியாளர் அசிசான் ஆயுப், அறிமுக நடப்பின்போது கடும்வெப்பம் தாங்காமல் இறந்தார்.
வெளிப்புற பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ளும்படி போலீசுக்கும் இராணுவத்துக்கும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
வெப்பநில தொடர்ந்து ஏழு நாள்களுக்கு 40 செல்சியசுக்கும் அதிகமாக இருக்குமானால் பள்ளிகளை மூடுவது உள்பட பல அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறினார்.
வாட்டி வதைக்கும் இந்த அனல் காற்று மாத இறுதிவரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
எல்லா மரங்களையும் வெட்டி நாசப்படுத்தினால் வேறு என்ன நடக்கும்? மறு நடவும் கிடையாது– சுற்றுப்புற கண்காணிப்பு சுற்று சூழல் பற்றி எவனுக்கும் அக்கறை கிடையாது. சம்பளம் வாங்கிகொண்டு தூக்கமடிக்கும் இந்த ஜென்மங்கள் இருக்கும் வரைக்கும் ஒன்றும் நடக்காது. மரங்களை கண்காணித்து பாது காக்காமல் எல்லாவற்றையும் வெட்டி சாய்த்து விட்டு இப்போது குத்துதே குடையுதே என்றால் யாருடைய தவறு?
மரம் நடுங்கள் என்னும் இயக்கம் சீக்கிரம் தலைகாட்டும் என நம்பலாம்!