‘ஐஎஸ் தீவிரவாதத்தை வீழ்த்த ஜனநாயகம் ஒன்றே வழி’

isisஜனநாயகத்தின்  வழிதான் ஐஎஸ்ஸை  வீழ்த்தி   மத்திய  கிழக்கில்  அமைதியை  நிலைநாட்ட  முடியும்  என  முன்னாள்  எகிப்திய  எம்பி  அப்துல் மவ்குட்  டார்டரி  கூறினார்.

சர்வாதிகார  ஆட்சிகளும்  பயங்கரவாதமும்  ஒன்று  மற்றொன்றை  வாழவைத்துக்  கொண்டிருப்பதாக  அவர்  சொன்னார்.

சர்வாதிகாரம்  நிலவும்போது  மக்கள்  அதை  எதிர்க்க  வன்முறையை  நாடுகிறாரகள். ஆனால், வன்முறை  தீர்வாக  அமைவதில்லை.

வன்முறையே  ஆட்சியும்  அதன்  அடக்குமுறைகளும்  நியாயமானவைதான்  என்று  கூறுவதற்கு  உதவியாக  அமைந்து  விடுகிறது.

“அமைதி  ஏற்பட  ஜனநாயகம்  ஒன்றே  வழி. அதனைக்  கொண்டுதான்  ஐஎஸ்-ஸையும்   அடக்குமுறையையும்   தோற்கடிக்க  முடியும்”, என்றார்.

“பிரச்னைக்குக்  காரணம் ஐஎஸ்  அல்ல, அது  பிரச்னையின்  அறிகுறிதான். பிரச்னைக்குக்  காரணம்  அடக்குமுறைகளும்  அடக்குமுறை  ஆட்சிகளும்தான்.  நாம் ஒன்றிணைந்து  பாடுபட்டால்  ஐஎஸ்-ஸையும்  அடக்குமுறையையும்  தோற்கடிக்க  முடியும்”,  என  நேற்றிரவு  கோலாலும்பூரில்   உரையாற்றியபோது  அப்துல்  மவ்குட்   கூறினார்.

அவருடைய  சொற்பொழிவுக்கு  டிஏபியும்  டிஏபியுடன்  தொடர்புகொண்ட   சிந்தனைக்  குழுவும்  ஏற்பாடு  செய்திருந்தன.