மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் விசாரணை அறிக்கை எஸ்ஆர்சி இண்டர்நேசனல் விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஊழல் எதுவும் செய்யவில்லை என்று காண்பிப்பதாக அரசாங்கம் கூறியுள்ள வேளையில் எம்ஏசிசி-இன் உயர் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்த மறுத்தார்.
“அந்த விவகாரத்தில் நான் கருத்துரைக்க விரும்பவில்லை”, என எம்ஏசிசி விசாரணை இயக்குனர் அஸாம் பாகி இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது எஸ்ஆர்சி விவகாரத்தில் நஜிப் ஊழல் செய்யவில்லை என்பதை எம்ஏசிசி விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறியிருந்தார்.