குவான் எங் அவரின் வீட்டைச் செய்தியாளர்களுக்குக் காண்பிப்பது நல்லது

kit siangபினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்,  ஜாலான்  பின்ஹோர்னில்  உள்ள  அவரது  வீட்டைச்  செய்தியாளர்களுக்குத்  திறந்து  காண்பிக்க  வேண்டும்.  அப்போதுதான்  அவர்கள்  அதை  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  கீர்  தோயோவின்  வீட்டோடு  ஒப்பிட்டுப்  பார்க்க  முடியும்.

இன்று  பினாங்கில்  டிஏபி-இன்  50ஆம்  ஆண்டு  விழாவில்   உரை  நிகழ்த்தியபோது  கட்சியின்  மூத்த  தலைவரும்   கேளாங்  பாத்தா  எம்பியுமான  லிம்  கிட்  சியாங்  அந்தக்  கருத்தை  முன்மொழிந்தார்.

சிலாங்கூரில்  உள்ள  கீர்  தோயோவின்  கடல்போன்ற  மாளிகையின்  படங்களையும்  கிட்  சியாங்  காண்பித்தார்.

“வருகின்ற  செய்திகளைப்  பார்க்கும்போது  மக்கள்  அந்த  வீடு  கீர்  தோயோவின்  வீட்டைப்  போன்றது  என்று  நினைத்துக்  கொண்டிருப்பதுபோல்  தெரிகிறது.

“அதனால்,  குவான்  எங்  செய்தியாளர்களுக்கு  வீட்டைக்  காண்பிப்பது  நல்லது  என்று  தோன்றுகிறது”, என்றாரவர்.