ஈக்காத்தான்: நஜிப் பதவி விலக வேண்டியதில்லை

kadirபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  நாட்டை  வழிநடத்த  வலுவான  அதிகாரம்  கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதால்  அவர்  பதவி  விலக  வேண்டிய  தேவையில்லை  என்கிறார்  பார்டி  ஈக்காத்தான்  பங்சா  மலேசியா  தலைவர்  அப்துல்  காடிர்  ஷேக்  பாட்சிர்.

பாஸ்  கட்சியுடன்  புதிய  அரசியல்  கூட்டணி  அமைத்துக்  கொண்டிருக்கும்  அப்துல்  காடிர்,  நஜிப்பின்  பதவி  விலகலைக்  கோரும்  மக்கள்  பிரகடனம்  குறித்து  கருத்துரைத்தபோது  அவ்வாறு  கூறினார்.

உத்துசான்  மிங்குவான்  மலேசியாவுக்கு  வழங்கிய  நேர்காணலில்  அப்துல்  காடிர்,  பிஎன்னுக்கு  நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை  ஆதரவு  இருப்பதைச்  சுட்டிக்காட்டினார்.

“மூன்றில்  இரண்டு  பங்கு  பெரும்பான்மை  இல்லை  என்றாலும்  கிட்டத்தட்ட  மூன்றில் இரண்டு  பங்கு  எம்பிகளின்  ஆதரவுடன்  அதாவது  நாடு  முழுவதும்  உள்ள   மூன்றில்  இரண்டு  பங்கு   மக்களின்  ஆதரவுடன்   பிஎன்  ஆட்சி  செய்கிறது.

“பிஎன்னில்  உள்ள  14  கட்சிகளும்  நஜிப்  நாடாளுமன்றத்  தலைவராக  இருப்பதை  விரும்புகின்றன. அம்னோ  தொகுதித்  தலைவர்கள்  95 விழுக்காட்டினர்  அவருக்கு  ஆதரவாக  உள்ளனர்.

“மக்களின்  அந்த  உரிமையைம்  மறுக்க  நாம்  யார்?”, என்றவர்  வினவினார்.