இந்தப் பாம்புக்கு மூன்றாவது கடி கிடைக்காது, ஸாகிட்

 

Ignoreex-umnomanஒரு குறிப்பிட்ட அம்னோ முன்னாள் உறுப்பினர் இன்னும் கட்சி விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். அவரை புறக்கணிக்குமாறு அம்னோவின் துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி சிலாங்கூர் மாநில அம்னோ உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

அவர் அந்த முன்னாள் உறுப்பினரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் மாகாதிர் முகமட்டைதான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

இப்போது பிரதமர் நஜிப் ரசாக்கை பிரதமர் பதவியிலிருந்து அகற்றும் இலட்சியத்தைக் கொண்டிருக்கும் அதே ஆள் இதற்கு முன்னர் அதே வேலையைச் செய்து மூன்றாவது பிரதமர் ஹுசைன் ஓனையும், ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியையும் பதவியிலிருந்து அகற்றியுள்ளார் என்று ஸாகிட் ஹமிடி கூறினார்.

இம்முறை அந்தப் பாம்பு மூன்றாவது முறையாக கடிக்க அம்னோ ஆப்பிள் கிடைக்காது என்று சிலாங்கூர் அம்னோ கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகையில் ஹமிடி கூறினார்.