அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று கியூபா சென்றதன்வழி அமெரிக்க- கியூபா உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்துள்ளார். அவரே 88 ஆண்டுகளில் கியூபா சென்ற முதல் அமெரிக்க அதிபராக திகழ்கிறார்.
1959-இல் கியூபா புரட்சி அத்தீவை ஆட்சி செய்து கொண்டிருந்த அமெரிக்க- ஆதரவு அரசாங்கத்தைக் கவிழ்த்ததை அடுத்து இரு நாடுகளுக்குமிடையில் ஒட்டுறவு இல்லாமல் ஒருவித பனிப்போர் நிலவி வந்தது.
ஒபாமாவின் வருகை இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை மேம்படுத்தும் என நம்பப்பட்டாலும் அதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
குறிப்பாக, 54-ஆண்டுகளாக கியூபாவுக்கு எதிராக இருந்து வரும் பொருளாதாரத் தடை. அதை அகற்றுமாறு ஒபாமா காங்கிரசைக் கேட்டுக்கொண்டார். ஆனால், காங்கிரஸ் அதைச் செய்ய முடியாதபடி குடியரசுக் கட்சி குறுக்கே நிற்கிறது.
-ராய்ட்டர்ஸ்