ரிம100மில்லியன் ஊழலின் சூத்திரதாரி இளைஞர், விளையாட்டு அமைச்சைச் சேர்ந்தவர்

Youtரிம100மில்லியன்  ஊழல்  தொடர்பில்  கைதான  மூத்த  அரசாங்க  அதிகாரி  தம்  அமைச்சைச்  சேர்ந்தவர்தான்  என்பதை  கைரி ஜமாலுடின்  உறுதிப்படுத்தினார்.

அவர்மீது  விசாரணை  நடந்து  வருவதைச்  சில  வாரங்களுக்கு  முன்பு  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  தம்மிடம்  தெரிவித்ததாக  இளைஞர்,  விளையாட்டு  அமைச்சர்  கூறினார்.

அரசாங்கப்  பணக்  கையாடல்  தொடர்பில் ஒன்பது  பேர்  கைது  செய்யப்பட்டிருப்பதாக  எம்ஏசிசி  மார்ச்  17-ல்  அறிவித்திருந்தது. அவர்களில்  ஒருவர்  அரசு  உயர்  அதிகாரி  என்றும்  அவரே  அக்கும்பலின்  சூத்திரதாரி  என்றும்  அது  குறிப்பிட்டது.

அந்த  ஒன்பதின்மரும்  அரசாங்கப்  பணத்தைக்  கையாடல்  செய்த  ஒரு  கும்பலைச்  சேர்ந்தவர்கள்  என்று  நம்பப்படுகிறது.

அக்கும்பலின்  69 வங்கிக்  கணக்குகள்  முடக்கப்பட்டுள்ளன.கார்கள்,  வீடுகள்,  நகைகள்  கைப்பற்றப்பட்டன.

ரிம400,000 பெறுமதியுள்ள  கடிகாரங்கள், ரிம600,000  மதிப்புள்ள  கைப்பைகள்  முதலியவை  பறிமுதல் செய்யப்பட்ட  பொருள்களில்  அடங்கும்..

குறிப்பிட்ட  சூத்துரதாரி  முறைகேடாகப்  பெற்ற  பணத்தில்  ஆடம்பர  வாழ்க்கை  வாழ்ந்திருக்கிறார்.  அடிக்கடி  குடும்பத்துடன்  வெளிநாடுகளுக்குப்  பறப்பாராம். முதல்  வகுப்பில்தான்  பயணம்  செய்வாராம்.