பயங்கரவாதிபோல் நடத்தப்பட்டேன்: ரிதுவான் டீ குமுறல்

teeஇனம்,  சமய  விவகாரங்கள்  குறித்து  சினமூட்டும்  வகையில்  கருத்துத்  தெரிவித்து  சர்ச்சையில்  சிக்கிக்கொள்ளும்  பேராசிரியர்  முகம்மட்  ரிதுவான்  டீ  அப்துல்லா,  சிங்கப்பூருக்குள்  செல்ல  அனுமதி  மறுக்கப்பட்டுத்  திருப்பி  அனுப்பப்பட்டார்.

அந்த  அனுபவத்தை  இன்று  சினார்  ஹரியானில்  தமது  பத்தியில்  நினைவுகூர்ந்த  அவர், திருப்பி  அனுப்பியதற்கான  காரணத்தைக்  கூட  சிங்கை  அதிகாரிகள்  தெரிவிக்கவில்லை  என்றார்.

“என்னைச்  சோதனை  செய்தார்கள். ஒரு பயங்கரவாதியிடம்  நடந்துகொள்வதுபோல்  என்னிடம்  நடந்து  கொண்டார்கள். படமெடுத்தார்கள்; கைரேகைகளைப்  பதிந்து  கொண்டார்கள்.

“இரண்டு  மணி  நேர விசாரணைக்குப்  பிறகு  (சிங்கப்பூருக்குள்) நுழைய  அனுமதி மறுக்கப்படுவதாகக்  கூறும்  கடிதம்  கொடுத்தார்கள்”, என்றவர் கூறினார்.

இதற்கு  ஊடகங்களில்  தாம்  தெரிவித்து  வந்துள்ள  கருத்துகள்  ஒருவேளை  காரணமாக  இருக்கலாம்  என்றவர்  நினைக்கிறார்.

மூன்றாண்டுகளுக்குமுன்  உத்துசான்  மலேசியாவில்  எழுதிய  ஒரு  கட்டுரையில்  “சிங்கப்பூருடன்  போர்  தொடுக்க  வேண்டும்”  என்று  கூறி  ஒரு  சர்ச்சையை  உண்டு  பண்ணி  இருந்தார்  ரிதுவான்.

“பூலாவ்  பத்து  பூத்தே  தகராற்றைத்  தீர்க்க  நான்  பிரதமராக  இல்லாமல்  போய்விட்டேனே. பிரதமராக  இருந்தால்  அதை  அனைத்துலக  நீதிமன்றத்துக்குக்  கொண்டு  சென்றிருக்க  மாட்டேன்.

“அந்தத்  தகாற்றுக்கு  ஒரே  தீர்வு  போர்  தொடுப்பதுதான்”, என்று அவர்  எழுதியிருந்தார்.