தம் முன்னாள் கணவர் மஹமுட் பெகிர் தயிப், மணவிலக்குக்குப் பிந்திய அன்பளிப்பாக ரிம30 மில்லியன் கொடுக்க வேண்டும் என கோலாலும்பூர் ஷியாரியா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து
ஷானாஸ் ஏ. மஜிட் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதற்கான மனுவை ஷியாரியா உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் சமர்ப்பித்தார்.
ரிம30மில்லியன் அன்பளிப்புப் பணம் போதாதென்று ஷானாஸ் நினைக்கிறார். பெகிர் ரிம100 மில்லியன் அன்பளிப்புப் பணம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோருகிறார். பெகிர் சரவாக்கின் முன்னாள் முதலமைச்சரான அப்துல் தயிப் மஹ்மூட்டின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவன் அப்பன் சரவாக்கை கொள்ளை அடித்து இவ்வளவும் அனுபவித்தான் –ஆண்டவன் இருக்கான் என்பது சந்தேகமே. மக்களின் பணத்தை தங்களின் சொந்த பணம் போல் செலவழிக்கும் ஈன ஜென்மங்கள். எங்கு பார்த்தாலும் 90% நாடுகளில் இதே நிலைதான் . அல்தான் துயா நாஜீபு உண்மையிலேயே நிம்மதியாக தூங்க முடியுமா? எத்தனையோ ஈன ஜென்மங்கள் நிம்மதியாக உறங்கும் போது அவனும் நிம்மதியாக தூங்க முடியும் -நம்மைப்போன்றவர்கள் தான் தூங்க முடியாது.