சரவாக்கில் அடியெடுத்து வைக்க முயன்ற பார்டி அமானா நெகாரா (அமானா) தலைவர் முகம்மட் சாபு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
“காலை மணி 10.30க்கு சிபு விமான நிலையம் வந்து சேர்ந்ததும் உடனே திருப்பி அனுப்பப்பட்டேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட், திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
மாட் சாபுவுக்கு மட்டுமல்லாமல் எதிரணித் தலைவர்கள் பலருக்கும் சரவாக் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மலேசியருக்கு மலேசியாவில் நுழைய தடை வெளி நாட்டினருக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு.
நாம் எல்லாம் பேருக்கு தான் மலேசியர். அங்கு போய் பார்த்தால் தான் புரியும். பிளிபிநோக்களும் இந்தொக்களும் அடையாள அட்டை இல்லாமலே இருக்க முடியும் ஆனால் நாம் அப்படி இருக்க முடியாது.
யார் ஒருவர் சபா , சரவாக் நுழைய தடையோ , அவர் இந்த நாடுக்கும்,மக்களுக்கும் நன்மையை செய்கிறார் என்று பொருள் !