பின்ஹோர்ன் சாலை பங்களா விற்பனை தொடர்பில் பாங் லி கூன் சத்திய பிரமாணம் செய்தார்

phangபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்குக்கு  தம்முடைய  ஜாலான்  பின்ஹோர்ன் பங்களாவை  விற்றது  தொடர்பில்  சத்திய  பிரமாணமொன்றைச்  செய்துள்ள   பாங்  லி கூன், அந்த  வீட்டு  விற்பனை  தொடர்பான  சர்ச்சையில்  யாராவது  தம்மை  இழுத்துவிட  முனைந்தால்  அவர்களுக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்போவதாகக்  கூறினார்.

பாங், டெண்டர்  மூலமாக  விற்கப்பட்ட  தாமான்  மங்கிஸ் நிலத்தை  வாங்கிய  KLDIC நிறுவனத்தில்  தாம் இயக்குனரோ  பங்குதாரரோ  அல்ல  என்று  சத்திய  பிரமாணத்தில்  அறிவித்துள்ளார்.

அந்நிறுவனத்தின்  நிர்வாகத்திலும்  தமக்குத்  தொடர்பில்லை  என்றாரவர்.

“மாநில  அரசுடன்  எனக்கு எந்த  அலுவலும்  இல்லை என்கிறபோது  நான்  சிஎம்முக்கு  வீடு  விற்றது  எதற்காக  இவ்வளவு  பெரிய  தேசிய  பிரச்னையாக  பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது  என்பது  எனக்குப்  புரியவில்லை”, என  பாங்  சத்திய  பிரமாணத்தில்  தெரிவித்துள்ளார்.  அவருடைய  சத்திய  பிரமாணத்தை  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  பீ  பூன்  போ  வாசித்துக் காண்பித்தார்.

“வீட்டை  அவருக்கு  விற்றதன்  மூலம்  மாநில  அரசாங்கத்திடமிருந்து  சலுகைகள்  எதையும்  நான்  பெறவில்லை. அவருக்கு  எந்த  விலையில்  வீட்டை  விற்பதென்பது  நானே  செய்த  முடிவாகும்.

“சிஎம்முக்கு ரிம2.8 மில்லியன் விலையில்  வீட்டை  விற்குமாறு  யாரும்  நெருக்குதல்  கொடுக்கவில்லை,  கட்டாயப்படுத்தவில்லை. சொந்த  விருப்பத்தின்  பேரில்தான்  விற்பனை  செய்தேன்”, என பாங்  கூறினார்.