பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி மாற்றுக் கருத்துகள் ஒடுக்கப்படுகின்றன

terrorஅரசாங்கங்கள்  குறை  சொல்வோரை  ஒடுக்குவதற்கான  சட்டங்களைக்  கொண்டுவர  பயங்கரவாதத்  தாக்குதல்களைக்  காரணம்  காட்டுகின்றன  என்று அனைத்துல  ஜூரர்கள்  ஆணைய(ஐசிஜே) ஆசிய-பசிபிக்   வட்டார  இயக்குனர்  சேம்  ஸரிபி  கூறினார்.

பயங்கரவாதத்  தாக்குதல்களுக்கு  எதிராக  மக்களைப்  பாதுகாக்கும்  கடப்பாடு  அரசாங்கங்களுக்கு  உண்டு. ஆனால்,  அரசாங்கங்கள்  தங்களுக்குள்ள  கடப்பாட்டை  ஒரு  வாய்ப்பாகப் பயன்படுத்தி  அரசாங்கத்துக்கு  எதிராகக்  குறை  சொல்லும்  அரசியல்வாதிகளையும்  சமூக  அமைப்புகளையும்  ஒடுக்க  சட்டங்களைக்  கொண்டு  வந்து  விடுகின்றன  என்றாரவர்.

மலேசியாவில்  பயங்கரவாத- எதிர்ப்புச் சட்டங்களாக  பாதுகாப்புக்  குற்ற(சிறப்பு நடவடிக்கை) சட்டம் (சோஸ்மா), பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம் (பொடா),  தேசிய  பாதுகாப்பு  மன்ற (என்எஸ்சி) சட்டமுன்வரைவு  ஆகியவை  கொண்டுவரப்பட்டிருப்பதையும்   இவை  உண்மையிலேயே  பயங்கரவாதத்துக்கு  எதிரானவைதாமா  எனத்  தெளிவாகத்  தெரியவில்லை  என்பதால்  அவற்றை  ஐசிஜே   குறைகூறி  இருப்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.