வீடு வாங்கியது தொடர்பில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குப் பல விருப்புரிமைகள் இருப்பதாக வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார்.
“அவர் விரைந்து விசாரணை செய்யுமாறு மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை வலியுறுத்தியிருப்பது ஒரு நல்ல காரியமாகும். இதை விரைவாக விசாரிக்க முடியும்”, என்று அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
விசாரணை முடியும்வரையில் லிம் விடுப்பில் செல்ல வேண்டுமா என்றும் அவரிடம் வினவப்பட்டது.
லிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு எதிராக பலவற்றைச் செய்யலாம் என்று குறிப்பிட்ட அவர், விடுப்பில் செல்வதும் அவற்றில் ஒன்று என்றார்.
அம்மா நீங்கள் சொல்வது நல்ல அரசியல் வாதிகளுக்கு. வாய்ப்பு கிடைத்தால் நாட்டையே சுருட்டி பையில் போட்டுக்கொள்ளும் குணம்படைத்தவர்கள் இவர்கள் என்பதை போக-போக பார்க்கலாம்.