புவா: குவான் எங் விடுப்பில் செல்ல வேண்டியதில்லை

puaஒரு  பங்களா  வாங்கியது  தொடர்பில்  சர்ச்சையில்  சிக்கியுள்ள  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீது  நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்பட்டாலொழிய  அவர்  விடுப்பில்  செல்ல  வேண்டிய  அவசியமில்லை. டிஏபி  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  இவ்வாறு  கூறினார்.

“குற்றம்  சாட்டப்பட்டால்  மட்டுமே  ஒருவர்  விடுப்பில்  செல்ல  வேண்டும்”,  என்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்   புவா  கூறினார்.

இல்லையென்றால்  யார்  வேண்டுமானாலும்  யார்மீதும்  புகார்  செய்து  விடுப்பில்  செல்ல  வைக்க  முடியும்.

“மிகவும்  எளிது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  புகார்  செய்கிறோம்.  அவர்  விடுப்பில்  செல்ல  வேண்டுமா?”, என  புவா  வினவினார்.

குவான்  எங்  விசாரணை  முடியும்வரையில்  விடுப்பில்  செல்ல  வேண்டும்  என்று  கூறப்படுவது  பற்றிக்  கருத்துரைக்கையில்  புவா  இவ்வாறு  சொன்னார்.