நஜிப்மீது வழக்கு தொடுத்தார் மகாதிர்: ரிம2.6பில்லியன் இழப்பீடு கோருகிறார்

suitடாக்டர்  மகாதிரும்  வேறு  இருவரும் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் மீது  வழக்கு  தொடுத்துள்ளனர். நம்பி ஒப்படைக்கப்பட்ட  பொறுப்பை  மீறினார்  என்றும்  சட்டத்தைப் பின்பற்ற  வேண்டியவரே  சட்டத்தை  மீறினார்  என்றும்  அவர்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோலாலம்பூர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு  பதிவு  செய்யப்பட்டது.

அவ்வழக்கில்  மகாதிரை  அடுத்து  அனினா  சாஆடுடினும்  கைருடின்  அபு  ஹாசனும்  இதர  வாதிகளாவர்.  அனினா, லங்காவி  அம்னோ  மகளிர்  பிரிவின்  முன்னாள்  தலைவர், கைருடின்  பத்து  கவான்  அம்னோ  தொகுதி  முன்னாள் உதவித்  தலைவர்.

மூவருமே  குடிமக்கள்  பிரகடன  இயக்கத்தின்  உறுப்பினர்கள்.

பிரதமராகவும்  பிஎன்  தலைவராகவும் அம்னோ  தலைவராகவுள்ள  நஜிப் 1எம்டிபி   தொடர்பான  விசாரணைகளைத்  தடுக்கவும்  தலையிடவும்  தடம்புரளச்  செய்யவும்  முயன்றார்  என்று  நீதிமன்றம்  அறிவிக்க   வேண்டும்  என்று  அவர்கள்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.

அனினா,  கைருடின்  ஆகியோருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுத்ததிலும்  நஜிப்  அதிகாரமீறல்  செய்திருக்கிறார்  என  அறிவிக்க  வேண்டும்  என்பதும்   அவர்களின்  கோரிக்கை. .

மேலும், அவரது  செயல்களுக்காக ரிம2.6 பில்லியன்  இழப்பீடும்  தங்களுக்கு  ஏற்பட்ட  சங்கடங்களுக்கும்  அவமதிப்புகளுக்கும்  ரிம42  பில்லியன்  இழப்பீடும்  வழங்கப்பட  வேண்டும்  என்று  அவர்கள்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.