பிரஸ்ஸல்ஸ் தாக்குதலை அடுத்து விமான நிலையப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது

airportபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில்  நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை  அடுத்து  விமான  நிலயங்களில்  பாதுகாப்பு  வலுப்படுத்தப்படுகிறது,  நடப்பில்  உள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகள்  மறுஆய்வு  செய்யப்படுகின்றன.

ஸவண்டெம்  விமான  நிலையத்திலும்  மெட்ரோ  ரயிலிலும்  நிகழ்ந்த  குண்டு  வெடிப்புகளுக்கு  ஐஎஸ்  தீவிரவாத  அமைப்பு  பொறுபேற்றுக்  கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய  பிரதமர்  மெல்கம்  டர்ன்புல்,  ஐரோப்பாவில்  பாதுகாப்பு  வலுவாக  இல்லாததுதான்  தாக்குதல்  நிகழ்ந்ததற்குக்  காரணம்  என்றார்.

ஐரோப்பாவைவிட  ஆஸ்திரேலியாவில்  பாதுகாப்பு  ஏற்பாடுகள்  வலுவானவை  என்று  அவர்  குறிப்பிட்டார்.

“ஐரோப்பிய  பாதுகாப்பில்  நிலவும்  பலவீனத்தால்தான்  அவர்கள்  அண்மைக் காலமாக  பல  பிரச்னைகளை  எதிர்நோக்கி  வருகிறார்கள்”, என்றவர்  சிட்னியில்  தெரிவித்தார்.