பினாங்கு சிஎம் பங்களா வாங்கியதன்மீது எம்ஏசிசி விசாரணை தொடங்கியது

probeபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  பங்களா  வாங்கிய  விசயத்தில்  முறைகேடுகள்  நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டிருப்பதன்  தொடர்பில்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  கொம்ப்டாரில்  உள்ள மாநில  அரசு  அலுலவகங்களுக்குச்  சென்று  விசாரணை  நடத்தியுள்ளது.

இதனை  இன்று  செய்தியாளர்களிடம்  தெரிவித்த  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினரும்  மாநில  டிஏபி  தலைவருமான  செள  கொன்  இயோ  வாரத்  தொடக்கத்தில்  எம்ஏசிசி  வந்ததாகக்  கூறினார்.

“புலன்  விசாரணையை  விரைவில்  முடிக்க  மாநில  அரசு  அதிகாரிகள்  எம்ஏசிசி-யுடன்  ஒத்துழைக்க  வேண்டும்”,  என்று அவர்  வலியுறுத்தினார்.