வேகமாக காரோட்டிச் செல்லும் அமைச்சர்களுக்கு அபராதம் இல்லை

nurஅரசாங்க அலுவல் காரணமான வேகமாக செல்லும் அரசாங்கக் கார்களுக்கு சம்மன் வழங்கப்படாது.

அந்தக் கார்களில் செல்லும் அமைச்சர்களோ, துணை அமைச்சர்களோ வேகமாகச் செல்வதற்கு நியாயமான காரணம் இருக்குமானால் சம்மன் வழங்கப்படாது என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார்.

யாரும் சட்டத்துக்கு மேற்பட்டவர்கள் அல்லர் என்பதை ஒப்புக்கொண்டாலும் விதி விலக்குகளும் உண்டு என நூர் ஜஸ்லான் சொன்னார்.

“சில நேரங்களில் ஒரு நிகழ்வுக்காக விரைந்து செல்ல வேண்டியிருக்கும்”, என்றாரவர்.

அமைச்சரோ, துணை அமைச்சரோ வேகமாகச் செல்வதற்கு நியாயமான காரணம் இருக்குமானால் சம்மன் வழங்கப்படாது என்ற விதி விலக்கு சம்பந்தப்பட்ட சட்டத்தில் இடம்பெற்றுள்ளதா?

பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்று அவரது காரில் வேகமாகச் சென்றார். அவரது காரின் ஓட்டுனர் பிரிட்டீஷ் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர். வேகமாகச் சென்ற அமைச்சரின் காரை போலீசார் நிறுத்தினர். அமைச்சர் விளக்கம் அளித்தார். விளக்கம் சரி. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இதோ, சம்மன் என்றனர். அமைச்சர் சம்மனைப் பெற்றுக்கொண்டார். இதுதான் சட்டத்தின் ஆளுமை!