இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்-ஸுடன் தொடர்பிருக்காலம் என்ற சந்தேகத்தின்பேரில் 13பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
அந்த அதிரடி நடவடிக்கையில் ஐஎஸ் தொடர்புள்ள பல ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என காலிட் டிவிட்டரில் தெரிவித்தார்.
இதனிடையே, காலிட் இன்று த ஸ்டார் நாளேட்டில் வெளியாகியிருந்த அவருடைய நேர்காணலில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் போலீஸ் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவை அமைக்கும் என்று அறிவித்திருந்தார்.
அதே நேர்காணலில் அவர், “உண்மையான தாக்குதலுக்குக் காத்திருக்க முடியாது” என்பதையும் ”சிறு தகவல் கிடைத்தாலும்” நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதையும் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத் தாக்குதல் தெளிவுபடுத்தியிருப்பதாக கூறினார்.