ரிம2.6 பில்லியன் நன்கொடை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்று தம்மை முந்திக்கொண்டு கூறிய அம்னோ அமைச்சர் அஸலினா ஒஸ்மானை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கடிந்து கொண்டார்.
“அவைத் தலைவரின் அதிகாரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அது தவறு.
“அதை எந்த அமைச்சரும் திரும்பச் செய்யக் கூடாது, கூடாது”, என்றாரவர். பண்டிகார் அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ரிம2.6 பில்லியன் விவகாரத்தை விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்று எதிரணித் தலைவர்கள் வினவியதற்கு பண்டிகார் இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் செலுத்தப்பட்ட ரிம2.6 பில்லியன் நன்கொடை பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அஸலினா, அதை விவாதிப்பது நீதிமன்ற விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அப்படிப்பட்ட கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஒ! அங்கேயும் ஏதோ சலசலப்போ?
நீயே ஒரு தலையாட்டி பொம்மை ????