இண்ட்ராப் மக்கள் பேரியக்கம் உதயம்

indrafபெர்சத்துவான்  இண்ட்ராப்  மலேசியா(பிஎச்எம்)  தலைவர்  பி.வேதமூர்த்தியுடன்   ஏற்பட்ட  கொள்கை  வேறுபாட்டால்
பிரிந்து  சென்ற  ஏழு  தலைவர்கள்  இண்ட்ராப்  மக்கள்  பேரியக்கத்தை(எச்பிஎம்)  அமைத்திருக்கிறார்கள்.

அது ஒதுக்கப்பட்ட  இந்தியர்களைப்  பிரதிநிதிக்கும்  அமைப்பாக  செயல்படும்  என்று  கூறிய  எச்பிஎம்  பேச்சாளர்  என்.கணேசன்  இண்ட்ராப்  ஒன்பது  ஆண்டுகளுக்குமுன்  எப்படி  தொடங்கியதோ  அப்படியே,  ஒரு  மக்கள்  இயக்கமாக  மறு-உருவாக்கம்  கண்டிருக்கிறது  என்றார்.

எம்பிஎம்,  தலைவர்  மன்றம்  ஒன்றால்  வழிநடப்படுகிறது.  இண்ட்ராபின் மூத்த  ஆர்வலர்கள்  ஐவர்  அதில்  இடம்பெற்றுள்ளனர்.

“சிறுபான்மையினராக,   ஓதுக்கப்பட்டவர்களாக  உள்ள  ஏழை  இந்தியர்களின்  உரிமைப்  போராட்டத்தில்  பங்களிக்க  விரும்பும்  அனைவருக்கும்  எச்பிஎம்  கதவுகள்  திறந்திருக்கிறது. இது  அனைவருக்ம்  இடமளிக்கும்  ஒரு  மக்கள்  இயக்கம்”,  என்று  கனேசன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

தலைவர்  மன்றத்தில்  டபள்யு. சாம்புலிங்கம்,  ஏ. கலைச்செல்வம்,  பி.ரமேஷ்,  கே. தமிழ்ச்செல்வம்,  என்.கணேசன்  ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.  இவர்கள்  பிஎச்எம்-மிலிருந்து  பிரிந்துவந்த  எழுவரில்  ஐவராவர்.