மக்கள் காங்கிரஸ்: மலாய்க்காரர்களே, நஜிப்பைக் கண்டு பயப்படுங்கள்

Peoplescongressmahathirஸைட் இப்ராகிம், முன்னாள் சட்டத்துறை அமைச்சர், பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவதற்கு மக்கள் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கடந்த மாதம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவ்வேண்டுகோளைத் தொடர்ந்து இம்மாதம் (மார்ச் 4 இல்) ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், இதர சிவில் அமைப்புகளின் தலைவர்களும் ஒன்றுகூடி பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 37 கூறுகள் அடங்கிய குடிமக்கள் பிரகடனத்தில் கையொப்பமிட்டனர்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று ஷா அலாம் கன்வென்சன் சென்டரில் 1,000 லிருந்து 1,500 அழைக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் கொண்ட மக்கள் காங்கிரஸ் கூட்டம் நடைபெறுகிறது.

அக்கூட்டத்தின் மிக முக்கியமான அங்கமாக முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் உரை இருக்கும். அவருடன் அம்னோ முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசின், முக்ரீஸ் மகாதீர், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 19 பேர் இன்று பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கும் மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றவிருக்கின்றனர்.

இன்று காலை மணி 11.00 லிருந்து மக்கள் காங்கிரஸ் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கன்வென்சன் சென்டருக்கு வரத் தொடங்கினர். சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, மசீச முன்னாள் தலைவர் லிங் லியொங் சிக் மற்றும் பலர் அங்கு வந்தவர்களில் அடங்குவர்.

பிற்பகல் மணி 2.00 அளவில், மகாதீர் முகமட், முகைதின் யாசின் மற்றும் சைட் இப்ராகிம் ஆகியோர் பிரதான மேடையில் இருந்தனர். 1,200 பேர் அமரக்கூடிய மண்டபம் நிறைந்திருந்தது. மேலும், சுமார் 100 பேர் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

 

மக்கள் காங்கிரஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் உரையாற்றிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம், கிராமங்களுக்குச் சென்று zaidஊழல் எவ்வாறு அவர்களின் வறுமைக்கு காரணமாக இருக்கிறது என்பதை அது பற்றி அறிந்திராக அங்குள்ளவர்களீடம் கூறுமாறு மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

தலைவரிடம் நேர்மை இல்லை என்றால், எந்தத் திட்டமும், அது மலாய் திட்டமாகவோ, இஸ்லாமிக் திட்டமாகவோ அல்லது வேறு எந்தத் திட்டமாகவோ இருந்தாலும் சரி, அமல்படுத்தப்பட முடியாது என்றாரவர்.

அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்திற்கு கடுமையான சட்டத் திருத்தங்களை முன்மொழிந்ததற்காக சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அப்பாண்டியை அவர் சாடினார்.

 

அடுத்த பேச்சாளர் சையட் சடிக், “நஜிப் அவர்களே, நான் உண்மையிலேயே உங்களின் மிகப் பெரிய ரசிகன். நான் உங்களை உண்மையான சீர்திருத்தவாதி என்று நம்பினேன், ஆதரவு அளித்தேன். ஆனால், 1எம்டிபி ஊழல் வெளிப்பட்டதும் அனைத்து சீர்திருத்தங்களும் பின்வாங்கி விட்டன”, என்று கூறினார்.

 

லிம்மை அல்ல, நஜிப்பை கண்டு பயப்படுங்கள்

 

ஜிகேசிஎம் என்ற 200 அம்னோ கிளைகள் அடங்கிய குழுவுக்குத் தலைவரான கமருல் அஸ்மான் ஹபிபுர் ரஹ்மான், ” ஒய்பி, லிம் அவர்களே, உங்களுக்கு நான்

peoplesconresskamarulமரியாதை தெரிவிக்கிறேன். நாங்கள் அம்னோவிலுள்ள புதிய வார்ப்புகள். மலாய்க்காரர்கள் லிம் கிட் சியாங்கைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. நஜிப்பை கண்டு பயப்படுங்கள்.”

மலாய்க்காரர்கள் இப்போது சுயமாகச் சிந்திக்கும் திறன் பெற்றுள்ளனர். நாம் பயப்பட வேண்டியதில்லை என்றாரவர்.

 

மகாதீர் காலத்தில் விலைவாசி இப்படி உயர்ந்ததில்லை

 

மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸின் இடைக்காலத் தலைவரும் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா சானி peoplescongresssaniஅப்துல் ஹமிட் தாம் ஆயிரக்கணக்கான புகார்களை வேலையிலிருந்து நியாயமற்ற முறையில் நீக்கப்பட்ட தொழிலாளர்களிடமிருந்து பெற்றிருப்பதாகக் கூறினார்.

 

இப்போது நஜிப் ஆட்சியில் நடப்பது போல், மகாதீர் ஆட்சியிலிருந்த போது பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை இவ்வளவு மோசமாக உயர்ந்ததில்லை என்று கூட்டத்தினரின் பலத்த ஆரவாரக் குரலோசைக்கிடையில் கூறினார்.

 

 

மகாதீரை பழிவாங்க …. ஆனால் மாட்டேன்

mahpuz1

 

எட்டாவது பேச்சாளரான பாஸ் போகோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார், “மகாதீர் ஒரு காலத்தில் ஆட்சியிலிருந்தார். எனக்கு அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருந்தால், நான் இன்று அவருடன் இங்கு இருக்கமாட்டேன்.”

 

பாதுகாப்புச் சட்டத்தின் தன்னை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடும் பத்திரத்தில் கையொப்பமிட்டவர் மகாதீர். அவரைப் பழிவாங்க தனக்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன என்று கூறிய மாபுஸ், “நாம் எண்ணவேண்டியது இன்றைக்காக மட்டுமல்ல, ஆனால் எதிர்காலத்திற்தகாகவும்”, என்று கூறினார்.

 

“நாம் பழிவாங்கும் எண்ணம் கொண்டிருந்தால், அதனால் பாதிக்கப்படப்போகிறவர்கள் நமது எதிர்காலச் சந்ததியினர்”, என்று மாபுஸ் மேலும் கூறினார்.

 

சட்டத்தையும் மாற்ற வேண்டும், மரியா

maria

 

 

ஆள்பவர்களை மட்டும் மாற்றினால் போதாது. சட்டத்தையும் கூட மாற்ற வேண்டும் என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

 

ஆண்டவனே, நன்றி

ஊழல் அரசாங்கத்தை நிராகரிப்பதற்கு அனைத்து மலேசியர்களுக்கும் ஒரே உரிமை இருக்க வேண்டும் ” என்று பாஸ் சாலோர் சட்டமன்றPeoplescongressHusam உறுப்பினர் கூறினார்.

“ஆண்டவனே, உனக்கு நன்றி. நமக்கு ஒரு 1எம்டிபிதான் இருக்கிறது, 2எம்டிபி அல்லது 3எம்டிபி அல்ல. இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்”, என்றாரவர்.

நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓர் இன அல்லது சமயப் பிரச்சனையாக மாற்றிவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

 

தற்காக்க முடியாததை எவ்வளவு காலத்திற்குத் தற்காக்க முடியும்?

 

s-murugesanஎழுந்து நின்று போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ம இகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ். முருகேசன் கூறினார்.

“எனது பாரிசான் நண்பர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் மௌனமாக இருக்கப்போகிறீர்கள்?

“எவ்வளவு காலத்திற்கு தற்காக்க முடியாதைத் தற்காக்கப் போகிறீர்கள்”, என்று வினவிய முருகேசன், ஒரு தலைவருக்கு காட்டப்படும் விசுவாசம் அவர் நாடு உருவாக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இருக்கும் வரையில்தான் என்றார்.

 

மலேசியாவை காப்பாற்றுவோம் என்பது மலாய்க்காரர்களுக்கு அச்சுறுத்தல் அல்ல

 

மலேசியாவை காப்பாற்றுவோம் என்ற திட்டம் மலாய்க்காரர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு திட்டம் அல்ல என்று அமனாவின் துணைத்Peoplescongresssalhuddin ayub தலைவர் ஷலாகுடின் அயுப் கூறினார்.

சுற்றுப்பயணிகள் மேல்நாடுகளில் காணப்படும் இஸ்லாமிய பண்பாடுகள் குறித்து உயர்வாகக் கூறுவதைக் குறிப்பிட்ட அவர், அதே பண்புகள் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் காணப்படுவதில்லை என்றார்.

“நோர்வேயில் நாம் பாதுகாப்பாக இருக்கலாம், ஆனால் இங்கே, நாம் மசூதிக்குச் செல்கிறோம், நமது காலணிகள் காணாமல் போகலாம் என்று சுட்டிக் காட்டினார்.

மலாய்க்காரர்களின் உரிமைகள் பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், “நமக்கு நல்ல மலாய்க்கார, நல்ல சீன, நல்ல இந்திய மற்றும் நல்ல பொதுச்சேவை தலைவர்கள் வேண்டும் என்றார்.

 

நஜிப்புக்கு நன்றி கூறினார் அம்பிகா

 

ஹாகாம் தலைவர் அம்பிகா பேசுவதற்கு எழுந்த போது அங்கிருந்தவர்களில் ஒருவர் “Buat Bersih 5” – பெர்சே 5 க்கு ஏற்பாடு செய்யுங்கள் peoplescongressambigaஎன்று முழக்கமிட்டார்.

நஜிப் ஆட்சி போதும், விடை கொடுப்போம் என்று அம்பிகா கூறினார்.

அதே வேளையில், சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.

அவரும் அவரது குடும்பத்தினரும் போதுமான துன்பங்களை அனுபவித்து விட்டனர் என்றாரவர்.

அரசியலில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒன்றுபடுத்தியதற்காக நஜிப்புக்கு ஏளனமாக அம்பிகா நன்றி கூறினார்.

“கொடுமைப்படுத்துதல் கொடுமைப்படுத்துபவருக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிறது”, என்று அபிகா சுட்டிக் காட்டினார்.