நாடாளுமன்றத்துக்கு 340கி.மீ. நடந்தே வந்த பாக்சைட்-எதிர்ப்பாளர்கள்

anti-bauxபகாங், பெர்செராவிலிருந்து  பாக்சைட்- எதிர்ப்பாளர்கள்  30பேர்  அம்மாநிலத்தில்  தூய்மைக்கேட்டுக்கு  எதிர்ப்புக்குத்  தெரிவிக்க   17-நாள்  340 கிலோ  மீட்டர்  நடந்தே  வந்து  இன்று  நாடாளுமன்றம்  சேர்ந்தனர்.

#red2green group  என்ற  பெயரைக்  கொண்ட  அக்குழுவினர்  தூய்மைக்கேடு  அறவே  இல்லை என்பதை   உறுதிப்படுத்த  ஒரு  வழிமுறை   காணப்படும்வரை  பாக்சைட்  எடுப்பதற்கான   இடைநிறுத்தத்தை  நீட்டிக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும்  மகஜர்  ஒன்றையும்  கொண்டு  வந்திருந்தனர்.

மகஜரை  இயற்கைவள   சுற்றுச்சூழல்  அமைச்சின்  தலைமை உதவிச்  செயலாளர்  முகம்ம  நஸிப்  ஜமாலுடினிடம்  அவர்கள்  ஒப்படைத்தனர்.

அவர்களுக்கு   உதவியாக  இருந்துவரும்  குவாந்தான்  எம்பி  புசியா  சாலே,  அக்குழுவினர்  சுற்றுச்சூழல்  பாதுகாப்பின்  பொருட்டு  நடந்தே  வந்திருப்பதையும்  நடந்துவரும்போது  அவர்களுக்கு  ஏற்பட்ட  பல்வேறு  இடர்களையும்  அரசாங்கம்  கருத்தில்  கொள்ள  வேண்டும்  என்று  வலியுறுத்தினார்.