மகாதீர்: ஆட்சியாளர்கள் நஜிப்பை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும்

 

Murgesrulersநேற்று மக்கள் காங்கிரஸில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் முகமட் மகாதீர் ஆட்சியாளர்கள் மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தும் பிரதமர் நஜிப் ரசாக் பதவி துறக்க வேண்டும் என்ற வலியுறுத்தலில் தலையீடும் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் தெரிவித்த ஆட்சேபத்தைத் தொடர்ந்து மலேயன் யூனியன் பிரிட்டீஷ் கவர்னர்-ஜெனரல் பதவிப் பிரமானச் சடங்கை சுல்தான்கள் எப்படி புறக்கணித்தார்கள் என்பதை நினைவுகூர்ந்த மகாதீர், இதன் விளைவாக மலேயன் யூனியன் திட்டம் கைவிடப்பட்டது என்றார்.

“ஆகவே, ஆட்சியாளர்கள் இதை வலியுறுத்தினால், பிரதமரை அகற்றுவதற்கான சாத்தியம் ஏற்படும்.

“மில்லியன்கணக்கானவர்கள் நஜிப் அகற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டால், ஆட்சியாளர்கள் அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

“எந்த அளவிற்கு நஜிப் அகற்றப்படுவதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நாம் ஆட்சியாளர்களிடம் காட்டினால், அரசமைப்புச் சட்டத்தில் அதற்கான அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றாலும், அவரை அகற்றுவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்”, என்று மகாதீர் கூறினார்.

பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதீர், இந்த விவகாரத்தில் அவர்களுக்கு அக்கறை இருக்கிறது. 1எம்டிபி விவகாரத்தை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் வெளியிட்ட மிக அபூர்வமான ஆணையை மகாதீர் சுட்டிக் காட்டினார்.

நஜிப்பை பதவி துறக்க வைப்பதற்கோ, வலுக்கட்டாயமாக நஜிப்பிற்கு பதிலாக வேறொருவரை நியமிப்பதற்கோ ஆட்சியாளர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. ஆனாலும் “அவர்கள் அழுத்தம் கொடுக்க முடியும்”, என்று மகாதீர் விளக்கமளித்தார்.