முன்பு சட்டமன்ற எதிரணித் தலைவர் இப்போது சுயேச்சை உறுப்பினர்

m'ccaமலாக்கா  சட்டமன்றத்தின்  முன்னாள்  எதிரணித்  தலைவர்  கோ  லியோங்  சான்  இப்போது  சுயேச்சை  உறுப்பினர்  என  சட்டமன்றத்  தலைவர்   ஒஸ்மான்  முகம்மட்   தெரிவித்தார்.

டுயோங்  தொகுதி  சட்டமன்ற  உறுப்பினரான  கோ  முன்பு  ஒரு  டிஏபி  பிரதிநிதி. இப்போது  இல்லை.  கட்சியை  இழித்துரைத்ததற்காக  அவர்  ஒராண்டுக்  காலம்  இடைநீக்கம்  செய்யப்பட்டிருக்கிறார்.

அவருக்குப்  பதிலாக   ஆயர்  குரோ  சட்டமன்ற  உறுப்பினர்  கூ  போய்  தியோங்  எதிரணியின்  புதுத்  தலைவர்  என்றும்  பண்டார்  ஹிலிர்  சட்டமன்ற  உறுப்பினர்   தே  கொக்  கியு   எதிரணி  தலைமை  கொறடா  என்றும்  ஒஸ்மான்  கூறினார்.

“இதன்  தொடர்பில்  டிஏபி  தலைமைச்  செயலாளரிடமிருந்து  கடிதம்  வந்தது”, என்றவர்  கூறினார்.  மலாக்கா  சட்டமன்றத்தின்  தொடக்கவிழாவுக்குப்  பின்னர்  ஒஸ்மான்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

மலாக்கா  டிஏபி  பிளவுபட்டிருப்பதாகவும்  அதில்  ஒரு  தரப்பு   கோ-வை  ஆதரிப்பதாகவும்  மற்றொரு  தரப்பு மத்திய  டிஏபி  தலைமையை  ஆதரிப்பதாகவும்   ஊடகச்  செய்திகள்  கூறுகின்றன..

–  பெர்னாமா