பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வழக்குத் தொடுக்க மறுத்த சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியின் நிலை குறித்து விவாதிக்க தீர்மானம் கொண்டுவந்த வழக்குரைஞர்கள் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மலேசிய வழக்குரைஞர் மன்ற ஆண்டுக் கூட்டத்தில் அத்தீர்மானத்தை முன்மொழிந்த மூன்று வழக்குரைஞர்களில் ஒருவரான பிரான்சிஸ் பெரெரா புக்கிட் அமானிலிருந்து தமக்குக் கடிதம் வந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
அக்கடிதத்தில், தீர்மானத்தை முன்மொழிந்த தம் சகாவான ஆர்.சண்முகத்தின் பெயரும் இருப்பதாக அவர் சொன்னார்.
“வழக்குரைஞர்களின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் தொடர்பில்தான் விசாரணை என்றும் புக்கிட் அமான் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.
“தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4 (1)-இன்கீழ் விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்”, என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
தம்மையும் சண்முகத்தையும் விசாரணைக்கு உதவியாக வாக்குமூலம் பெறுவதற்குத்தான் அழைத்திருக்கிறாரக்ளா அல்லது விசாரணையே தங்கள்மீதுதானா என்பது தமக்குத் தெளிவாக தெரியவில்லை என்றும் பெரேரா கூறினார்.
போலீசாரின் விசாரணை “அதிர்ச்சியளிக்கிறது” என்றும் வழக்குரைஞர் மன்றத்தின் உரிமை மீறப்பட்டிருக்கிறது என்றும் பெரெரா குறிப்பிட்டார்.
எதற்கு தேச நிந்தனை சட்டம் என்பதற்கு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. போலிசும் துப்புக் கெட்டு இருக்கு!
இவனெல்லாம் பொறுப்பு உள்ள பதவியில் இருக்கும் அதி மேதாவிகள்– தகுதி தரம் பார்த்து பதவி கொடுத்து இருந்தால் நிலை வேறு– சப்பிகளும் ஜால்ராக்களும் தானே இப்போது பதவியிலும் அதிகாரத்திலும் இருக்கின்றனர்.